ஜான், இதை ஒன்றும் நான் தவறாக நினைக்கவில்லை

மெல்ல மெல்ல எங்கள் நிறுவனம் வளர துவங்கியது. நிறுவனம் ஆரம்பித்து சில வருடங்களுக்குள் நல்ல வளர்ச்சி கிட்டியது. எனக்கு நல்ல லாபம். பணம் கொட்டோ கொட்டு என கொட்டியது. எனவே வருடம் ஒரு முறை அந்த வெளிநாட்டு நிறுவன உரிமையாளர் எங்கள் ஊருக்கு வருகை தரும்பொழுது அவருக்கு தேவையான அனைத்து தேவைகளையும் நான்தான் செய்வேன்.. அவர் தங்குவதற்கு ஒரு நல்ல நட்சத்திர ஓட்டலை நான்தான் ஏற்பாடு செய்வேன். மேலும் அவர் இங்கு சுற்றுலா செல்ல நான் உடன் செல்வேன். மேலும் அவருக்கு நம் ஊர் பெண்கள் என்றால் கொள்ளை ப்ரியம்.